Friday, July 8, 2011

திருவாசகம்
சிவ புராணம்


சிவ புராணம் என்பது சிவனைப் பற்றிய அருட் செயல்கள், முறைகள் பற்றி விளக்கும் அனாதி தொட்டே உள்ளவற்றைக் கூறும் புராணம்.


சிவபுராணம் இயற்றியவர் - மாணிக்க வாசகர்.


ஆசிரியர் குறிப்பு - (சுருக்கமாக) இவர் ஆமர்த்திய பிராமணர் வகுப்பைச் சேர்ந்தவர்.
இவரது ஊர் திருவாதவூர். எனவே திருவாதவூரர் என்றும் அழைப்பர்.


தந்தையின் பெயர் - சிவ பாத இருதயர்.


தொழில் - அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராக இருந்தவர்.

வரலாற்று சுருக்கம் - பாண்டிய மன்னனிடம் அமைச்சராக வேலை பார்த்துக் கொண்டிருந்த போது மன்னன் இவரிடம் வேண்டுமளவு பொன்னும் பொருளும் எடுத்துக் கொண்டு தொண்டி துறைமுகத்தில் சென்று குதிரை வாங்கி வரப் பணித்தான். இறைவன் திருவிளையாடலால் இன்று ஆவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் திருப்பெருந்துறையில் இறைவன் குருவாக பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அதனைக் கண்டதும் காந்தம் கண்ட பசாசம் போல ஈர்க்கப் பட்டு அவரிடம் திருவடி தீட்சை பெற்று உபதேசம் பெற்றார். அதன் விளைவாக மாணிக்க வாசகர் தன்னை மறந்து சிவ சிந்தனையில் ஈடுபட்டார். காலம் உருண்டது. இறைவன் சித்தப்படி அங்கே இறைவனுக்கு கோவில் அமைத்தார். பாண்டிய மன்னன் விசாரித்துக் கேட்கும் போது இறைவனிடம் நான் என்ன செய்வது என்று கேட்கிறார். இறைவன் ஆவணி மூல நட்சத்திரத்தன்று குதிரைகள் வந்து சேரும் என்று கூறச் சொன்னார். ஆவணி மூலத்தன்று இறைவனே குதிரை சேவகனாக வந்தார். நரிகளையெல்லாம் பரியாக்கிக் கொண்டு வந்தார். குதிரையை பரிசோதித்து விட்டு எல்லோரும் நல்ல உயர் சாதிக்குதிரையாக உள்ளது என்று கூற இறைவன் விடை பெற்றுச் சென்றார். இரவில் குதிரைகள் எல்லாம் நரியாகி நாட்டில் இருந்த குதிரைகளையும் மக்களையும் கடித்து விட்டுச் சென்றது. எனவே மாணிக்க வாசகர் மீது சினம் கொண்ட மன்னன் அவரைத் தண்டிக்க ஏற்பாடு செய்தான். இறைவன் அவருக்காக வைகையில் வெள்ளம் வரச் செய்தார். வெள்ளத்தைஅடைக்க வீட்டிற்கு ஒரு ஆள் வர வேண்டும் என மன்னன் ஆணையிட பிட்டு செய்யும் கிழவியான வந்தி என்னும் ஒரு சிவ பக்தைக்கு அவளது கூலியாளாக பிட்டை கூலியாகக் கொள்வதாகக் கூறி அடைக்க வந்தான். வந்தவன் வெள்ளத்திற்கு மண் சுமக்காமல் விளையாடிக் கொண்டிருக்கவே மன்னன் அவரை பிரம்பால் அடிக்க எல்லா உயிர்களுக்கும் அடி விழுந்தது. இறைவன் மண் சட்டியைப் போட வெள்ளம் நின்றது. இறைவன் எல்லோருக்கும் காட்சியளித்தான். 
மாணிக்க வாசகர் நிம்மதியாக ஒவ்வொரு கோவில்களாக சென்று இறைவனைப் புகழ்ந்து பாடுகிறார். இறைவன் மாணிக்க வாசகரது முன் தோன்றி இது வரை பாடிய பாடல்களையெல்லாம் பாடுக என்று கூற அவர் பாடினார்.  பாடி முடித்த பின் இறைவன் அவரிடம் 
“பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்று கூற திருக்கோவையார் பாடினார்.
இறைவன் தான் எழுதிய ஓலைச்சுவடியை தில்லையில் பஞ்சாட்சரப் படியில் வைத்தார். அதை கல் யானை எடுத்து முதற் படியில் வைத்தது. அதனைக் கண்ட தில்லை அந்தணர்கள் அதனை எடுத்து நோக்க அதில் 
“மாணிக்க வாசகன் சொல்ல தில்லைச் சிற்றம்பலவன் எழுதியது “ என்று இருந்தது. எல்லோரும் அது யார் என்று எல்லோரும் கேட்க  மாணிக்க வாசகர் இறைவனைக்காட்டி உள்ளே நுழைந்து மறைந்தார்.
காலம் - கி.பி 3ம் நூற்றாண்டாக இருந்திருக்கலாம். ஏனெனில்

No comments:

Post a Comment